ஆளுந்தரப்பிலிருந்து 14 பேர், எதிரணியிலிருந்து 07 பேர்; பரஸ்பரம் தாவுவதற்கு தீர்மானம்

🕔 August 20, 2017

ரசாங்கத்திலுள்ள சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஒன்றிணைந்த எதிரணிப் பக்கமாகத் தாவுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று, ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர்; அரசாங்கத் தரப்புக்கு மாறவுள்ளனர்.

இதன்படி, அரசாங்கத் தரப்பிலுள்ள 11 முதல் 14 வரையிலான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணிக்குச் செல்லவுள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை, எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர், அரசாங்கத் தரப்புக்கு மாறவுள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

ஆளுந்தரப்பிலிருந்து வெளியேறவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில்; சு.கட்சியைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணி பக்கமாகச் செல்லவுள்ளனர் என்று கூறினார். அடுத்த மாதம் 08 மற்றும் 16ஆம் திகதிகளில் இந்த வெளியேற்றம் நிகழும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தின் இருண்டு வருட நிறைவினை அடுத்து, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த வெளியேற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்