சோமாலிய தற்கொலைத் தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலி

🕔 June 2, 2016

Somalia - 0998சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் நேற்று புதன்கிழமை நடந்த தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 1‌5 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பிரமுகர்கள் தங்கும் ஹோட்லொன்றின் நுழைவாயில் கார்குண்டு மூலம் தாக்கப்பட்டதோடு,  தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ‌அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

கடந்த பிப்ரவரியில் மொகாதிசுவி‌ல் அல்-ஷபாப் இய‌க்கத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 09 பேர் கொல்லப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்