மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

🕔 March 25, 2016
Maitripala - 086துபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பேருக்கு, மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உள்ளன என்று வெளியான தகவல்களையடுத்து இந்த அறிக்கையை ஜனாதிபதி கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 100 பேருக்கு மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் காணப்படுவதாகவும், அவை எந்தக்காலத்தில் வழங்கப்பட்டன, அவற்றை யார் நடாத்திச் செல்கின்றனர் என்பது பற்றிய விபரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் கோரியிருந்தார்.

நல்லாட்சி அரசாங்கம் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை எனவும், இது குறித்து ஐயமின்றி தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கை ஒன்றினை வெளியிட வேண்டுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்