Back to homepage

Tag "ஜனாதிபதி தேர்தல்"

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு 0

🕔16.Sep 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிடுமாறு அரசியல் கட்சியொன்று தமக்கு அழுத்தம் விடுத்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். திங்கட்கிழமை (இன்று) ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் தமக்கு உள்ள போதும், தாம் அதனைச் செய்யப்

மேலும்...
எவ்வகையான தடை ஏற்படுத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: சஜித் பிரேமதாஸ

எவ்வகையான தடை ஏற்படுத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: சஜித் பிரேமதாஸ 0

🕔16.Sep 2019

யார் எதனைக் கூறினாலும், யார் எவ்வகையான தடைகளை ஏற்படுத்தினாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன் என்று, ஐ.தே.கட்சி பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; எனது பெயர் முன்வைக்கப்பட்டவுடன் அரசியல் களத்தில்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது 0

🕔14.Sep 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை இம் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகள் தமது வேட்பாளர்களைக்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் சு.கட்சி போட்டியிட வேண்டும்: குமார வெல்கம

ஜனாதிபதி தேர்தலில் சு.கட்சி போட்டியிட வேண்டும்: குமார வெல்கம 0

🕔11.Sep 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். அந்தக் கட்சியில் தொடர்ந்தும் தன்னை போன்றோர் உள்ளதால் அது சிறந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். கூட்டணி

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் 12 கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக, மஹிந்த தேசபிரியவுக்கு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் 12 கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக, மஹிந்த தேசபிரியவுக்கு அறிவிப்பு 0

🕔7.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்கு 12 கட்சியகள் தீர்மானித்து தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். இதுதவிர இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தனக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்த எழுத்து

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார். இந்த விடயத்தை அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சு.கட்சியினுடைய மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் யாரைத் தேர்வு செய்ய வேண்டும்: கல்முனை ரன்முத்துகல தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாரைத் தேர்வு செய்ய வேண்டும்: கல்முனை ரன்முத்துகல தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பு 0

🕔2.Sep 2019

– பாறுக் ஷிஹான் – நல்லாட்சியில் அபிவிருத்திகள் எவையும் இடம்பெறவில்லை என கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்க ரத்ன தேரர்  ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “இப்பொழுது நாம் முக்கியமான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.  விசேடமாக எமது நாட்டின் தலைவரை

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும் 0

🕔20.Aug 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை.    மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த தேர்தலில், கண்களை மூடிக்கொண்டு, உணர்ச்சி வேகத்தில் மைத்திரி – ரணில் கூட்டணிக்கு வாக்களித்த முஸ்லிம்கள்,

மேலும்...
நிச்சயமாகப் போட்டியிடுவேன்: சஜித் உறுதிபட தெரிவிப்பு

நிச்சயமாகப் போட்டியிடுவேன்: சஜித் உறுதிபட தெரிவிப்பு 0

🕔17.Aug 2019

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக தான் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதிபடத் தெரிவித்துள்ளார். அம்பலன்தொட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். “எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். எனினும் இந்த தேர்தலில் நான்

மேலும்...
கோட்டாவைக் கண்டு பயப்பட வேண்டாம்: பஸில் ராஜபக்ச தெரிவிப்பு

கோட்டாவைக் கண்டு பயப்பட வேண்டாம்: பஸில் ராஜபக்ச தெரிவிப்பு 0

🕔8.Aug 2019

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கின்றேன். ஆனாலும் திறமையான நிர்வாகத் திறன் கொண்ட, பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார்” என்று, என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். “கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கினால் அவரைக்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும் 0

🕔6.Aug 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.   மாகாண சபைத் தேர்தலொன்று

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி

ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி 0

🕔28.Jul 2019

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தாமதப்படுத்த முயற்சிக்கிறதா என்கிற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக, ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதையே சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜனதிபதித் தேர்தலைப் பிற்படுத்துவதாக அமைந்து விடும் என்றும், அவர்

மேலும்...
சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔28.Jul 2019

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறியதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த

மேலும்...
நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது

நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது 0

🕔23.Jul 2019

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்டதொரு நாளில் நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உலக அழிவோ அல்லது உலகை மூழ்கடிக்கும் பேய் மழை பொழிந்தால் அன்றி வேறு எந்த காரணத்துக்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார் தேர்தல் ஆணைக்குழுவின்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் 20 லட்சம் பேருக்கு, வாக்களிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது

ஜனாதிபதி தேர்தலில் 20 லட்சம் பேருக்கு, வாக்களிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது 0

🕔23.Jul 2019

“ஜனாதிபதி தேர்தலின் போது 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைவரம் ஏற்படும் எனவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்