ஜனாதிபதி தேர்தலில் 12 கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக, மஹிந்த தேசபிரியவுக்கு அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்கு 12 கட்சியகள் தீர்மானித்து தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுதவிர இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தனக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த எழுத்து மூல ஆவணங்களை பெற்றுக் கொண்ட போதும், வேட்புமனுவுக்குரிய காலம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அவற்றுக்குரிய விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அரசியல் கட்சிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டு கோள்களுக்கிணங்கவே 12 அரசியல் கட்சிகள் தனக்கு இந்த விடயத்தை அறிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.