நிச்சயமாகப் போட்டியிடுவேன்: சஜித் உறுதிபட தெரிவிப்பு

🕔 August 17, 2019

னாதிபதி தேர்தலில் நிச்சயமாக தான் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அம்பலன்தொட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

“எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். எனினும் இந்த தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று, அந்தக் கட்சியிலுள்ள ஒரு தரப்பார் கூறிவரும் நிலையில், மற்றுமொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்