ஜனாதிபதி தேர்தலில் சு.கட்சி போட்டியிட வேண்டும்: குமார வெல்கம
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சியில் தொடர்ந்தும் தன்னை போன்றோர் உள்ளதால் அது சிறந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியும் எனவும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும் எனவும் தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கூறுவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
மற்றைய சிறிய கட்சிகளுடன் இணைந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.