ஜனாதிபதி தேர்தலில் 20 லட்சம் பேருக்கு, வாக்களிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது
“ஜனாதிபதி தேர்தலின் போது 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைவரம் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதால், அரசாங்கத்தின் மீது இளைஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டுமெனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.