ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

🕔 September 14, 2019

னாதிபதி தேர்தலுக்கான திகதியை இம் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகள் தமது வேட்பாளர்களைக் களமிறங்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்