ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
சு.கட்சியினுடைய மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி இணைந்து ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் என்கிற எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.