ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தாமதப்படுத்த முயற்சிக்கிறதா என்கிற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக, ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதையே சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜனதிபதித் தேர்தலைப் பிற்படுத்துவதாக அமைந்து விடும் என்றும், அவர் கூறினார்.
இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே இப்போதைய தேவை எனவும் அவர் தெரிவித்தார்.