சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு

🕔 July 28, 2019

னாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறியதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

அதற்காகவே கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி; சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: ரணில் முன்னிலையில், ஐ.தே.கட்சியின் தவிசாளர் உள்ளிட்டோர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்