Back to homepage

Tag "சாய்ந்தமருது"

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம்

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம் 0

🕔12.Oct 2017

– எம்.வை. அமீர் – ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக், கல்முனைத் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம்) மற்றும் கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதே ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இப்பிரதேசங்களுக்கான பிரதேச

மேலும்...
குப்பைகளால் நிறையும் சாய்ந்தமருது: மக்களின் குற்றச்சாட்டும், மாநகரசபையின் பதிலும்

குப்பைகளால் நிறையும் சாய்ந்தமருது: மக்களின் குற்றச்சாட்டும், மாநகரசபையின் பதிலும் 0

🕔3.Oct 2017

– றிசாத் ஏ காதர் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதியோரங்கள் கழிவுகள் நிரம்பிவழியும் இடங்களாக மாறியிருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள், அலுவலகத்துக்குச் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பல்வேறு விதமான அசௌகரியங்களை சந்திக்க நேருவதாக மக்கள் கூறுகின்றனர்.குறிப்பாக சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலத்துக்கு அருகாமையில் அதிகளவான கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இவ்வழியால் பாடசாலைக்கு

மேலும்...
மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔15.Sep 2017

– எம்.வை.அமீர், யூ.கே. காலிதீன்-மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்து, சாய்ந்தமருதில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. மியன்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த முஸ்லிகள் மீது நடத்தப்படும் அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலைகள், வன்புணர்வுகள் மற்றும் துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மனிதாபிமானத்துக்கு

மேலும்...
சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார்

சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார் 0

🕔10.Sep 2017

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப், முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்கிற செய்தியொன்றினை சில நாட்களுக்கு முன்னர் நாம் வழங்கி இருந்தோம். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.ஏ. ஜெமீலை, அந்தக்

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகம், மீண்டும் கல்முனைக்கு வரும்: அமைச்சர் தலதா உறுதி

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகம், மீண்டும் கல்முனைக்கு வரும்: அமைச்சர் தலதா உறுதி 0

🕔27.Aug 2017

– எம்.வை. அமீர்- கல்முனையில் பல வருடங்களாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம், தேவைகள் காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், குறித்த காரியாலயத்தை மிக விரைவில் மீண்டும் கல்முனைக்கே இடமாற்றித் தரவுள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல உறுதி வழங்கினார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்த,

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு 0

🕔15.Aug 2017

– எம்.வை. அமீர் –சாய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.சாய்ந்தமருது பிரதேசத்தை தனி  உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல், அமைச்சர் பைசர்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, விரைவில் பிரகடனப்படுத்தப்படும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, விரைவில் பிரகடனப்படுத்தப்படும்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔12.Aug 2017

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்குரிய காலம் கனிந்துள்ளதாகவும், கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும் என்றும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென தனியான உள்ளுராட்சி சபையை கோரிய போது, பல்வேறு எதிர் அழுத்தங்களையும் பொருட்படுத்தாது அதனைப் பெற்றுத்தருவதாக பள்ளிவாசலில் வைத்தது

மேலும்...
கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம்

கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம் 0

🕔9.Aug 2017

– எம்.வை. அமீர் – கோலாகலமாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவே கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள், மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்று, அப்பிரதேச மக்கள் கேள்வியெழுபு்புகின்றனர். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள் சில காலங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும்

மேலும்...
சாய்ந்தமருதில் வாழ்வாதார உதவி;  பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில்

சாய்ந்தமருதில் வாழ்வாதார உதவி; பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில் 0

🕔4.Aug 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக, வாழ்வாதார உதவி வழங்கும் முதற்கட்ட நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்றது.இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு, சுய தொழிலை மேற்கொள்வதற்கு

மேலும்...
கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம்

கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம் 0

🕔22.Jul 2017

– எம்.வை. அமீர் – ‘கலைகளின் சங்கமம்’ எனும் மகுடத்தில், கலாசார நிகழ்வுகளின் அரங்கேற்றம், சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல். ஹனிபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கலந்துகொண்டார். சாய்ந்தமருது

மேலும்...
அவனை ஏன் தொழுகை நடத்த விட்டீர்கள்;  ‘எவசைன்’ ஹாஜியாரிடம், ஹக்கீம் பாய்ச்சல்

அவனை ஏன் தொழுகை நடத்த விட்டீர்கள்; ‘எவசைன்’ ஹாஜியாரிடம், ஹக்கீம் பாய்ச்சல்

🕔13.Jul 2017

– அஹமட் – – 01 –சாய்ந்தமருது பிரதேசத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வருகை தந்திருந்தார். இதன்போது, தனது அமைச்சின் கீழுள்ள லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் கிளையொன்றினை சாய்ந்தமருதில் அமைச்சர் திறந்து வைத்ததோடு, சாய்ந்மதருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனமொன்றினையும் அன்பளிப்பாக வழங்கினார். அது

மேலும்...
‘முழக்கத்து’க்கு எதிரான கூக்குரலால் பயந்து போன ஹக்கீம்; இரண்டரை நிமிடத்தில் பேச்சை முடித்துப் பறந்தார்

‘முழக்கத்து’க்கு எதிரான கூக்குரலால் பயந்து போன ஹக்கீம்; இரண்டரை நிமிடத்தில் பேச்சை முடித்துப் பறந்தார் 0

🕔11.Jul 2017

– அஹமட் – கொழும்பிலிருந்து சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மு.கா. தலைவர் ஹக்கீம்; அங்கு 02 நிமிடங்களும் 28 விநாடிகளும் மட்டுமே உரையாற்றி விட்டு, கிளம்பிச் சென்ற சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ‘லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம்’ எனும் பெயரில், சாய்ந்தமருதில் மின்னொளி கிறிக்கட் சுற்றுப் போட்டியொன்று நடைபெற்றது.

மேலும்...
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம்

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம் 0

🕔10.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிய சம்பவமொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் இடம்பெற்றது. ‘லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017’ எனும் பெயரில், சாய்ந்தமருதில் நடைபெற்று வந்த, கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வில், அமைச்சர் ரஊப்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு, ஜனாஸா சேவைக்கான வாகனம்; அமைச்சர் றிசாத் அன்பளித்தார்

சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு, ஜனாஸா சேவைக்கான வாகனம்; அமைச்சர் றிசாத் அன்பளித்தார் 0

🕔10.Jul 2017

– யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வழங்கினார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் வைத்து, பள்ளிவாசல் தலைவர்  வை.எம். ஹனிபாவிடம் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது.இந் நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.

மேலும்...
காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல்

காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல் 0

🕔7.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருதில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் சேவைகள் மன்றக் காரியாலயத்தை, அம்பாறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு, தேசிய கொள்கைகள் திட்டமிடல் மற்றும் பொருளாதார ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேராவிடம், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் வலியுறுத்தினார். அமைச்சரை நேரில் சந்தித்த பொறியியலாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்