தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம்

🕔 July 10, 2017

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிய சம்பவமொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

‘லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017’ எனும் பெயரில், சாய்ந்தமருதில் நடைபெற்று வந்த, கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வில், அமைச்சர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இதன்போதே, தேசியக்கொடி தலைகீழா ஏற்றப்பட்டது. இதனால், அங்கிருந்த பலரும் அசௌகரியங்களுக்குள்ளாகினர்.

ரஊப் ஹக்கீம் தேசியக் கொடியினை ஏற்றும் போது, அருகில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் உள்ளிட்ட பலர் நின்றிருந்தனர்.

தேசியக் கொடியினை ரஊப் ஹக்கீம் தலைகீழாக ஏற்றிய புகைப்படங்களை, பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதோடு, ஹக்கீமுடைய அரசியலும் சமீப காலமாக, தலைகீழாகவே செல்வதாக விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்