சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார்

🕔 September 10, 2017

– அஹமட் –

ல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப், முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்கிற செய்தியொன்றினை சில நாட்களுக்கு முன்னர் நாம் வழங்கி இருந்தோம்.

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.ஏ. ஜெமீலை, அந்தக் கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீன் முன்னிலைப்படுத்தி வருவதாகத் தெரிவித்து வரும் சிராஸ் மீராசாஹிப்; அந்த நிலை தொடர்ந்தால், முஸ்லிம் காங்கிரசில் – தான் இணைய நேரிடலாம் என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகின்றார்.

இதனையே நாம் செய்தியாக வழங்கியிருந்தோம்.

சிராஸ் மீராசாஹிபும் ஜெமீலும் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நமது செய்தி வெளியானமையினை அடுத்து, பேஸ்புக் நேரடி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சிராஸ் மீராசாஹிப்; அவரைப் பற்றி செய்தி வெளியிட்ட புதிது இணையத்தளத்தினை, பெயர் குறிப்பிடாமல் தனக்கு விரும்பியவாறு வசை பாடியிருந்தார்.

மேலும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்; மக்கள் தீர்மானத்தின் படி, எதிர்காலத்தில் முடிவினை எடுப்பேன் என்றும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியின் எந்தவொரு இடத்திலும், கட்சித் தலைவரின் கட்டளைக்கு இணங்க, நடப்பேன் என்றோ, முடிவினை எடுப்பேன் என்றோ  அவர் கூறவில்லை.

இந்தப் பதிலினூடாகவே, அவருடைய – கட்சி மாறும் எண்ணத்தை விளங்கிக் கொள்ள முடிந்தது.

இவை அனைத்துக்கும் மகுடம் வைத்தால் போல், அந்த நிகழ்சியின் ஓரிடத்தில் “எங்களுடைய தலைவர் ரஊப் ஹக்கீம்” என்று, தன்னை மறந்து கூறிய சிராஸ் மீராசாஹிப், தான் யாரென்பதை அப்பட்டமாக அம்பலப்படுத்தினார்.

தன்னை தூய்மையான ஒருவராக நிரூபிக்கப் போன சிராஸ்; கடைசியில், தனது மனசுக்குள் இருந்த உண்மையை உளறிக் கொட்டிவிட்டு வந்ததுதான், அந்த நிகழ்ச்சியின் ‘ஹைலைட்’ ஆக அமைந்தது.

தொடர்பான செய்தி: ‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்