4500 ரூபாய் லஞ்சம் பெற்ற, குவாஸி நீதவான் கைது

4500 ரூபாய் லஞ்சம் பெற்ற, குவாஸி நீதவான் கைது 0

🕔27.May 2024

கண்டி – உடத்தலவின்ன குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குவாஸி நீதிமன்ற வளாகத்தில் வைத்து 4500 ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, அவரை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர் என, லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விவாகரத்து வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் ஆவணங்களை

மேலும்...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும் 0

🕔27.May 2024

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் திகதி வரை இணையவழியாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனவரி 31, 2025 அன்று,

மேலும்...
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை 0

🕔27.May 2024

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் (Jean- François Pactet) இலங்கையிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலமானார். ராஜகிரியவில் உள்ள அவரின் இல்லத்தில் அவர் நேற்று (26) காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு வயது 53 ஆகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தூதுவரின் மறைவுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று தனது ஆழ்ந்த

மேலும்...
இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு

இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு 0

🕔26.May 2024

காஸாவின் தெற்கு ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பை, இஸ்ரேல் புறக்கணித்துள்ளமையை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேசத்தின் சீற்றம் அதிகரித்துள்ளது. “இஸ்ரேலின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது” என, ஐ.நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் கூறியுள்ளார். இது இவ்வாறிருக்க இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள்

மேலும்...
நகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டதில் பெருமளவு கடத்தல் தங்கம் மீட்பு: 4.5 பில்லியன் ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை

நகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டதில் பெருமளவு கடத்தல் தங்கம் மீட்பு: 4.5 பில்லியன் ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை 0

🕔26.May 2024

நாட்டிலுள்ள 13 முன்னணி நகைகள் தயாரிக்கும் நிறுவனங்களை, இலங்கை சுங்கப் பிரிவுினர் சுற்றிவளைத்ததில், நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவு தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இற்காக 4.5 பில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோசடியில் சில முன்னணி நகை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்கள் நீண்ட

மேலும்...
தகவல் தந்தால் 20 லட்சம் ரூபாய் பரிசு: சிஐடி அறிவிப்பு

தகவல் தந்தால் 20 லட்சம் ரூபாய் பரிசு: சிஐடி அறிவிப்பு 0

🕔25.May 2024

தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கான தகவல்களை வழங்குபவர்களுக்கு 02 மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, குற்றப் புனாய்வு திணைக்களம் (சிஐடி) அறிவித்துள்ளது. தெமட்டகொடையைச் சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட் என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 071-8591753 என்ற இலக்கத்துக்கு சிஐடியின் பணிப்பாளர்

மேலும்...
சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு

சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு 0

🕔25.May 2024

அரச நிறுவனங்கள் மற்றும் இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

மேலும்...
ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு

ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு 0

🕔24.May 2024

காஸாவின் தெற்கு நகரமான ரஃபா மீது நடத்தும் ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றமான – சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) – இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமையை ‘பேரழிவு’ என்றும் அந்த நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ரஃபா மீது நடத்தப்படும் தாக்குதல் காரணமாக – இரண்டு

மேலும்...
03 லட்சத்துக்கும் அதிகமான மின்தடைகள் கடந்த சில நாட்களில் பதிவு: இ.மி.ச பொறியியலாளர் சங்கம் தெரிவிப்பு

03 லட்சத்துக்கும் அதிகமான மின்தடைகள் கடந்த சில நாட்களில் பதிவு: இ.மி.ச பொறியியலாளர் சங்கம் தெரிவிப்பு 0

🕔24.May 2024

மூன்று லட்சத்துக்கும் அதிகமான மின்தடை சம்பவங்கள் கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்குள் 30,000 க்கும் அதிகமான மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. அண்மைய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட மின் தடைகளை மீளமைப்பதில், கணிசமான காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்,

மேலும்...
அட்டாளைச்சேனையில்: கிறிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொள்ளும் கடின பந்து பயிற்சி முகாம்

அட்டாளைச்சேனையில்: கிறிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொள்ளும் கடின பந்து பயிற்சி முகாம் 0

🕔24.May 2024

அம்பாறை மாவட்டத்திலுள்ள கிறிக்கெட் வீரர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், கடின பந்து கிறிக்கெட் பயிற்சி முகாமொன்று நாளை (25) சனிக்கிழமை, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும் தொழிலதிபருமான லொயிட்ஸ் ஆதம்லெப்பையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், இலங்கை கிறிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி

மேலும்...
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் மரணம்

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் மரணம் 0

🕔23.May 2024

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூஸா – பிந்தலிய புகையிரத கடவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன், மூன்று இளைஞர்ககள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என அடையாளம்

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?: சிறைச்சாலை திணைக்களம் தகவல்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?: சிறைச்சாலை திணைக்களம் தகவல் 0

🕔22.May 2024

வெசாக் போயா தினத்தையொட்டி நாளை (230 ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் இல்லை என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போயா தினத்தில் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன மற்றும் அமரபுர பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள்,

மேலும்...
மிளகாய், மஞ்சள் தூளுடன் 20 கோடி பெறுமதியான கொக்கெய்ன்: பிலிபைன்ஸ் பெண் இலங்கையில் கைது

மிளகாய், மஞ்சள் தூளுடன் 20 கோடி பெறுமதியான கொக்கெய்ன்: பிலிபைன்ஸ் பெண் இலங்கையில் கைது 0

🕔22.May 2024

கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது, ​​அவரிடம் இருந்து  02 கிலோ 851 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொக்கெய்ன் தொகையின் பெறுமதி 200 மில்லியன் (20 கோடி) ரூபாய்க்கும் அதிகம் என சுங்கத்

மேலும்...
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கிகரிக்கின்றோம்:  அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அறிவிப்பு

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கிகரிக்கின்றோம்: அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அறிவிப்பு 0

🕔22.May 2024

அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பலஸ்தீனத்தை – ஒரு தனி நாடாக உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளன. இதனால் இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான தமது தூதுவர்களை திருப்பி அழைக்க இஸ்ரேஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இன்று (22) புதன்கிழமை பேசிய அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் (Simon Harris), “இன்று அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை

மேலும்...
50 வயது பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜன்ட் கைது

50 வயது பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜன்ட் கைது 0

🕔22.May 2024

பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் – பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கிரிய பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் சிற்றுண்டிச்சாலையை நடத்தும் ஐம்பது வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்ள்ளார். இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்