தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும்

🕔 May 27, 2024

ரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜூன் 14ம் திகதி வரை இணையவழியாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜனவரி 31, 2025 அன்று, 11 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உதவித்தொகைக்கு தகுதி பெறுவார்கள்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://onlineexams.gov.lk/eic இல் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்