தலைப்புச் செய்திகள்

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்தானது

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் இன்று (26) பீஜிங் மற்றும் கொழும்பில் நடைபெற்றன.

இந்த மறுசீரமைப்பினால் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்கள் கிடைக்கும் என்பதோடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்காக – அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், நாட்டின் உட்கட்மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை அடிப்படையிலான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ளவும் முடியும் எனவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இலங்கை இன்று (26) பீஜிங்கில் இறுதி உடன்பாட்டை எட்டியது.

சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க, சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

அதன் பின்னர் இலங்கைக்கான சீனத் தூதரகத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹாங் (Qi Zhenhong) மற்றும் திறைசேரி உதவிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்த கோப்புகளை பரிமாறிக் கொண்டனர்.