பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

🕔 June 26, 2024

கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கண்டி – ஹீரஸ்ஸகல பிரதேசத்தில் கைதாகியுள்ளார்.

காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்காக பெண் ஒருவரிடமிருந்து 25,000 ரூபாயை கிராம சேவகர் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் இவ்விடயத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மேற்படி பணத்தொகையை குறித்த பெண்ணிடம் கிராம சேவகர் பெற்றுக் கொண்டபோதே, அவரை நேற்று (25) லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரை ஜுலை 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்