மாணவர்கள் 30 பேரும் ஆசிரியரும் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதி

🕔 June 26, 2024

குளவி கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் நேற்று (25) மாலை பாடசாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​​வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, பாடசாலைக்கு அருகிலிருந்த கூடு ஒன்றிலிருந்து குளவிகள் – மாணவர்கள் மற்றும் ஆசிரியரை தாக்கியுள்ளன.

ஆசிரியருடன் 22 ஆண் மாணவர்களும் எட்டு பெண் மாணவர்களும் சிகிச்சைக்காக மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்