
கண்டி – உடத்தலவின்ன குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவாஸி நீதிமன்ற வளாகத்தில் வைத்து 4500 ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, அவரை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர் என, லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விவாகரத்து வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் ஆவணங்களை ஒப்படைப்பதற்காக, பெண் ஒருவரிடம் நீதவன் லஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஜ-எல்ல, கும்புக்கந்துர பகுதியைச் சேர்ந்த பெண் – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தமைக்கு அமைவாக, குவாஸி நீதவான் கைது செய்யப்பட்டார்.



