
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற ஊழியர்களின் ஆடை தொடர்பில் நிலவி வரும் சர்ச்சை குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை நேற்று (15) தொலைபேசியில் அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
அண்மையில் சுகாதார உதவியாளர்களாக நியமனம் பெற்ற 09 முஸ்லிம் பெண் ஊழியர்கள், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் அவர்கள் தமது சீருடைக்கு மேலதிகமாக தலைமை மறைக்கும் ஸ்கார்ஃப் மற்றும் ஜீன்ஸ் ஆகியவற்றை அணிகின்றனர்.
இவ்வாறு ஆடை அணிவது – சீருடையல்ல என்றும், ஸ்கார்ஃப் மற்றும் ஜீன்ஸ் ஆகியவற்றை அணியக் கூடாது எனவும், வைத்தியசாலை நிர்வாகம் – குறித்த முஸ்லிம் பெண் ஊழியர்களை வற்புறுத்தி வருகின்றது.



