ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் மரணம்

🕔 May 23, 2024

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூஸா – பிந்தலிய புகையிரத கடவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன், மூன்று இளைஞர்ககள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்