நகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டதில் பெருமளவு கடத்தல் தங்கம் மீட்பு: 4.5 பில்லியன் ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை

🕔 May 26, 2024

நாட்டிலுள்ள 13 முன்னணி நகைகள் தயாரிக்கும் நிறுவனங்களை, இலங்கை சுங்கப் பிரிவுினர் சுற்றிவளைத்ததில், நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவு தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இற்காக 4.5 பில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மோசடியில் சில முன்னணி நகை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக அரசுக்கு வரி வருவாயை செலுத்தாமல், சட்டவிரோதமான வழிகளில் தங்கத்தை இந்தியாவில் இருந்து கொண்டு வருவது தெரியவந்துள்ளது.

தற்போது சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்ட தங்கங்களி மதிப்பை குறைத்து மதிப்பிடுவதற்க நடவடிக்கை உள்ளதாகவும், இதில் சில சுங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தமக்குத் தெரியவந்துள்ளது எனவும் டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகுகளில் தங்கம் கடத்தி வரப்பட்டு, சட்டவிரோதமான முறையில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்