பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது

🕔 June 25, 2024

க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க – உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது என்று, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க அத்தியாவசியப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் இதர வகை காகிதாதிகளின் விலைகளைக் குறைப்பதற்கு, கல்வியமைச்சு தலையிடும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்