விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

🕔 June 25, 2024

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தாக்கல் செய்த மனு இன்று (25) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிரதிவாதிகளுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கை ஜூலை 09ஆம் திகதி மீள அழைக்கவும், அன்று வரை தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்