பார்சலில் வந்த 40 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’: கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு

🕔 June 24, 2024

நான்கு கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ (Crystal methamphetamine) போதைப்பொருளுடன் பொதி (பார்சல்) ஒன்று – கொழும்பில்லுள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்தப் பொதி தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 400 மில்லியன் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்