இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை

🕔 May 27, 2024

லங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் (Jean- François Pactet) இலங்கையிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலமானார்.

ராஜகிரியவில் உள்ள அவரின் இல்லத்தில் அவர் நேற்று (26) காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு வயது 53 ஆகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் தூதுவரின் மறைவுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

“இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பாக்டெட் திடீர் மறைவு குறித்து வெளிவிவகார அமைச்சு ஆழ்ந்த வருத்தத்துடன் அறிந்து கொள்கிறது.”

“பிரெஞ்சு அதிகாரிகளுக்கும் மறைந்த தூதுவரின் குடும்பத்தினருக்கும் எல்லா உதவிகளும் வெளியுறவு அமைச்சினால் வழங்கப்படும்” என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த துயரமான நேரத்தில் இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும், இறுதிச் சடங்குகள் குறித்து உரிய நேரத்தில் அதிகாரிகளால் அறிவிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

பிரான்ஸ் தூதுவர் – திடீர் சுகவீனம் காரணமாக காலமானார் என்று தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டு தொடக்கம் இவர் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவராக பணியாற்றினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்