இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு

🕔 May 26, 2024
பிரான்செஸ்கா அல்பானீஸ்

காஸாவின் தெற்கு ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பை, இஸ்ரேல் புறக்கணித்துள்ளமையை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேசத்தின் சீற்றம் அதிகரித்துள்ளது. “இஸ்ரேலின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது” என, ஐ.நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள் தேவையில்லை என்றும், இது போன்ற பேச்சுவார்த்தைகள் இஸ்ரேலிய ராணுவத்துக்கு காஸாவில் – ஆக்கிரமிப்பைத் தொடர அதிக அவகாசம் தருவதாகவும், ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன் தெரிவித்துள்ளார்.

மறுபுறமாக, வடக்கு காஸாவின் ஜபாலியா முகாம் பகுதியில், இஸ்ரேலிய படையை ஒரு சுரங்கப்பாதைக்குள் சூசகமாக வரவைத்து – ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும், கைது செய்யப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பின் அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கூறியுள்ளார். மேலும் இவர்களின் எண்ணிக்கையை அறிய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்த போதிலும் இஸ்ரேலிய ராணுவம் இந்த கூற்றை மறுத்ததுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் 07 முதல், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குறைந்தது 35,903 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 80,420 பேர் காயமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்