அட்டாளைச்சேனையில்: கிறிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொள்ளும் கடின பந்து பயிற்சி முகாம்

🕔 May 24, 2024

ம்பாறை மாவட்டத்திலுள்ள கிறிக்கெட் வீரர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், கடின பந்து கிறிக்கெட் பயிற்சி முகாமொன்று நாளை (25) சனிக்கிழமை, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும் தொழிலதிபருமான லொயிட்ஸ் ஆதம்லெப்பையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், இலங்கை கிறிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா – பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதோடு, கிறிக்கெட் சபையின் உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ள ஆர்வமுடைய கழகங்கள் – விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு, ஏற்கனவே ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய ஏராளமான கழகங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, இந்த பயிற்சி முகாமின் ஏற்பாட்டாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை கூறினார்.

இதேவேளை, நாளை பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் விளையாாட்டுக் கழகங்கள் மற்றும் வீரர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றினை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் லொயிட்ஸ் ஆதம்லெப்பை மேலும் தெரிவித்தார்.

நாளை காலை 9.00 மணிக்கு இந்தப் பயிற்சி முகாம் ஆரம்பமாகவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்