போதைக் குளிசைகளை மாணவர்களுக்கு விநியோகித்து வந்தவர் கைது

போதைக் குளிசைகளை மாணவர்களுக்கு விநியோகித்து வந்தவர் கைது 0

🕔26.Oct 2023

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு   போதைக் குளிசைகளை  விநியோகித்து வந்த    சந்தேக நபர் தொடர்பில் – கல்முனை விசேட அதிரடிப்படையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, நேற்று  புதன்கிழமை (25)  இரவு – காரைதீவு பிரதான 

மேலும்...
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர் 0

🕔26.Oct 2023

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரத்தில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. முன்னர் 16 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 40 வயதான ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல்தாரியான ரொபர்ட் கார்ட் “ஆயுததாரியாகவும்,

மேலும்...
அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்: மனைவி, மகன், மகள் படுகொலை

அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்: மனைவி, மகன், மகள் படுகொலை 0

🕔25.Oct 2023

அல் ஜசீரா ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ் (Wael Dahdouh) தங்கியிருந்த காஸாவிலுள்ள வீட்டின் மீது இன்று (25) இஸ்ரேல் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் அவரின் அவரின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் இருந்து பேசிய அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ், இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசாவில் இருந்து

மேலும்...
09 மாதங்களில் 168 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; 22 பேர் கர்ப்பம்: பொலிஸாரின் அலட்சியமும் காரணம் என்கிறார் ராஜாங்க அமைச்சர் கீதா

09 மாதங்களில் 168 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; 22 பேர் கர்ப்பம்: பொலிஸாரின் அலட்சியமும் காரணம் என்கிறார் ராஜாங்க அமைச்சர் கீதா 0

🕔25.Oct 2023

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர் என, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஒக்டோபர் 25) ஊடகங்களிடம் பேசிய அவர், 168 துஷ்பிரயோக சம்பவங்களில் 22 குழந்தைகள் கர்ப்பமடைந்ததாக கூறினார். எனவே, இது தொடர்பில்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலக வேண்டும்; சுமந்திரன் கோரிக்கை:  288 நாட்களில் 39 தினமே சபைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலக வேண்டும்; சுமந்திரன் கோரிக்கை: 288 நாட்களில் 39 தினமே சபைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔25.Oct 2023

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் – அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு  செய்யமுடியாதிருப்பதன் காரணமாக, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென, அந்த கட்சியின் பேச்சாளரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோதே

மேலும்...
மாநகர சபைக்குத் சொந்தமான பல லட்சம் ரூபாய் பெறுமதியான பழைய பத்திரிகைகள் திருட்டு

மாநகர சபைக்குத் சொந்தமான பல லட்சம் ரூபாய் பெறுமதியான பழைய பத்திரிகைகள் திருட்டு 0

🕔25.Oct 2023

கொழும்பு, மாநகர சபைக்கு சொந்தமான வெள்ளவத்தை மெனிங் சந்தையில் அமைந்துள்ள களஞ்சியசாலையிலிருந்து 1486 கிலோ கிராம் பழைய பத்திரிகைகள் திருடப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் 03 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை மெனிங் பொதுச் சந்தையின் நான்காவது மாடியில் இந்த களஞ்சியசாலை அமைந்துள்ளது. கடந்த செப்டெம்பர் 09 முதல்

மேலும்...
இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல்

இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல் 0

🕔25.Oct 2023

பலஸ்தீனில் தற்போது இஸ்ரேல் நடத்திவரும் போருக்காக – நாளொன்றுக்கு 246 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பெறுமதியில் 8075 கோடி ரூபாவுக்கும் அதிகம்) செலவிட்டு வருவதாக, இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தபோதும், பெருமளவிலான ராணுவ அணிதிரட்டல் மற்றும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களின் ரொக்கெட் தாக்குதல்களால் பொருளாதாரத்தின் மீது

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை 0

🕔25.Oct 2023

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்ட போது, அதனை தொலைபேசியில் பதிவு செய்தார் எனும் குற்றச்சாட்டில், சட்டத்தரணி ஒருவருக்கு – 08 மாதங்கள் பணிகளில் ஈடுபடக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணி நிஸாம் மொஹமட் ஷமீன் என்பவருக்கு எதிராக மேற்படி

மேலும்...
ஐ.நா செயலாளரை பதவி விலகுமாறு இஸ்ரேல் கடும் கோபத்துடன் அறிவிப்பு: பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை காரணமானது

ஐ.நா செயலாளரை பதவி விலகுமாறு இஸ்ரேல் கடும் கோபத்துடன் அறிவிப்பு: பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை காரணமானது 0

🕔25.Oct 2023

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாதுகாப்பு சபையில் ஆற்றிய உரை தொடர்பில் இஸ்ரேல் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, ஐ.நா செயலாளரைப் பதவி விலகுமாறும் அறிவித்துள்ளது. நியூயார்க்கில் நேற்று செவ்வாய்கிழமை (24) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு சபை விவாதத்தில் பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உட்பட 87 பேர் உரையாற்றினர்.

மேலும்...
“அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில்

“அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில் 0

🕔24.Oct 2023

ஹமாஸ் போராளிகள் தன்னை பணயக் கைதியாக வைத்திருந்தபோது, தன்னுடன் நட்பாக நடந்து கொண்டதாக – நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட இரண்டு இஸ்ரேலியப் பெண்களில் ஒருவரான 85 வயதுடைய யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ் (Yocheved Lifshitz) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவ் -இல்- அமைந்துள்ள வைத்தியசாலைக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்; “ஒவ்வொரு நபரையும் ஒரு

மேலும்...
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை 0

🕔24.Oct 2023

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் இல் உள்ள அல் -அக்ஸா பள்ளிவாசலை, இஸ்ரேலிய பொலிஸார் மூடியுள்ளனர் என்று, அதற்குப் பொறுப்பான இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. மேலும், இஸ்லாமிய வழிபாட்டாளர்களை வளாகத்திற்குள் நுழைவதைத் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் இஸ்லாமிய வக்ஃப் துறை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலிய பொலிஸார் – யூத வழிபாட்டாளர்களை இன்று காலையில் மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்துக்குள்

மேலும்...
போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக, சாகல ரத்நாயக தெரிவிப்பு

போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக, சாகல ரத்நாயக தெரிவிப்பு 0

🕔24.Oct 2023

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் – நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக தெரிவித்தார். அதனூடாக முப்படையினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினை இணைத்து சுற்றிவளைப்புகளுக்கு அவசியமான திட்டங்களை வகுப்பதற்கான இயலுமை கிட்டும் என்றும் கூறினார்.

மேலும்...
பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, இலங்கையர் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, இலங்கையர் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியீடு 0

🕔24.Oct 2023

நாட்டின் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து இலங்கையர்கள் இருவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிக்லப்பிள்ளை ‘ரமேஷ்’ என்கிற ஆண்டனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோர் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு ரமேஷ்க்கு எதிராக இன்டபோல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டிருந்தமையும்

மேலும்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 08 கோடி ரூபாவை இழந்தவர்கள்: சாணக்கியன் எம்.பியை சந்தித்து, நீதி பெற்றுத் தருமாறு கோரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 08 கோடி ரூபாவை இழந்தவர்கள்: சாணக்கியன் எம்.பியை சந்தித்து, நீதி பெற்றுத் தருமாறு கோரிக்கை 0

🕔24.Oct 2023

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறையிட்டுள்ளனர். 08 கோடி ரூபாவினை – போலி முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு கோரியும் நாடாளுமன்ற உறுப்பினரிடம்

மேலும்...
“ரணிலுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா”: ஜோன்ஸ்டன் அச்சுறுத்தல்

“ரணிலுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா”: ஜோன்ஸ்டன் அச்சுறுத்தல் 0

🕔24.Oct 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி – தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு, ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்