இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல்

🕔 October 25, 2023

லஸ்தீனில் தற்போது இஸ்ரேல் நடத்திவரும் போருக்காக – நாளொன்றுக்கு 246 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பெறுமதியில் 8075 கோடி ரூபாவுக்கும் அதிகம்) செலவிட்டு வருவதாக, இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருந்தபோதும், பெருமளவிலான ராணுவ அணிதிரட்டல் மற்றும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களின் ரொக்கெட் தாக்குதல்களால் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள மறைமுக செலவுகள் மதிப்பீடு செய்யப்படவில்லை.

இதேவேளை இஸ்ரேலின் பொருளாதார நிலைவரத்தை – ‘நிலையானது என்பதில் இருந்து ‘எதிர்மறையானது’ என S&P Global நிறுவனம் (நிதி தகவல் மற்றும் பகுப்பாய்வு வணிகத்தில் ஒரு பொது நிறுவனம்) தரமிறக்கியமை குறித்து கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்; இந்த திருத்தம் ஒரு ‘எச்சரிக்கை’ என்றும், பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும் பற்றாக்குறைகளை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், இஸ்ரேல் மத்திய வங்கியின் ஆளுநர் அமீர் யாரோன் பதவி விலகியிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக – அவர் தனது பதவிக்காலத்தை தொடர்வதற்கு முடிவு செய்துள்ளமை குறித்தும் – நிதியமைச்சர் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்