பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, இலங்கையர் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியீடு

🕔 October 24, 2023

நாட்டின் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து இலங்கையர்கள் இருவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிக்லப்பிள்ளை ‘ரமேஷ்’ என்கிற ஆண்டனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோர் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

2010 ஆம் ஆண்டு ரமேஷ்க்கு எதிராக இன்டபோல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி செய்தமைக்காக – ஐக்கிய நாடுகள் சபையின் நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலின் விதிமுறைகளின் கீழ் – இவர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இந்தப் பின்னணியிலேயே ஒக்டோபர் 23, 2023 திகதியிட்டு – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வெளியிட்ட வர்த்தமானி மூலம் – ரமேஷ் மற்றும் முருகேசு ஆகியோர் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்