மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை

🕔 October 24, 2023

க்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் இல் உள்ள அல் -அக்ஸா பள்ளிவாசலை, இஸ்ரேலிய பொலிஸார் மூடியுள்ளனர் என்று, அதற்குப் பொறுப்பான இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்லாமிய வழிபாட்டாளர்களை வளாகத்திற்குள் நுழைவதைத் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் இஸ்லாமிய வக்ஃப் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலிய பொலிஸார் – யூத வழிபாட்டாளர்களை இன்று காலையில் மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்துக்குள் நுழைந்து, பள்ளிவாசலில் உள்ள நிலையை மீறி சடங்குகளை நடத்த அனுமதித்துள்ளனர்.

அந்த புனித தலத்தில் முஸ்லிம்கள் மட்டுமே வழிபட முடியும் என்று பாலஸ்தீனிய வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்