ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை

🕔 October 25, 2023

ஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்ட போது, அதனை தொலைபேசியில் பதிவு செய்தார் எனும் குற்றச்சாட்டில், சட்டத்தரணி ஒருவருக்கு – 08 மாதங்கள் பணிகளில் ஈடுபடக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணி நிஸாம் மொஹமட் ஷமீன் என்பவருக்கு எதிராக மேற்படி ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பான உண்மைகளை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு நேற்று (24) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பாக 2020 செப்டெம்பர் 09 ஆம் திகதி – குறித்த ஆணைக்குழு முன்னிலையில் முகமது முர்சியா மர்ஷா முல்லா என்பவர் சாட்சியமளிப்பதாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.. அப்போது, பிரதிவாதியான மேற்படி சட்டத்தரணி தனது கையடக்கத் தொலைபேசியில் நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பி. ஹேரத், சட்டத்தரணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்ற விதிகளை மீறியதாக விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றம் வழங்கிய தீர்பில், சட்டத்தரணியின் நடவடிக்கையால் உச்ச நீதிமன்ற விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி மூன்றாவது சரத்து மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, தண்டனையாக, 2024-ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து எட்டு மாதங்களுக்கு சட்டத்தரணியின் பணியை நிறுத்தி வைக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்