அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்: மனைவி, மகன், மகள் படுகொலை

🕔 October 25, 2023
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் குடும்பத்தை இழந்த ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ்

ல் ஜசீரா ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ் (Wael Dahdouh) தங்கியிருந்த காஸாவிலுள்ள வீட்டின் மீது இன்று (25) இஸ்ரேல் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் அவரின் அவரின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் இருந்து பேசிய அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ், இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசாவில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு பகுதியில் – தனது குடும்பத்தை குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

வடக்கு காஸாவை விட்டும் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்தமையை அடுத்து, ஊடகவியலாளர் தஹ்தூவின் குடும்பத்தினர் தங்கள் வீட்டை காலி செய்து, தெற்கு காஸாவிலுள்ள நுசிராத் அகதிகள் முகாமிலுள்ள தற்காலிக வீடோன்றுக்கு குடிபெயர்ந்தனிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

“இப்போது நடந்தது தெளிவாக இருக்கிறது. இது காஸாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து தாக்குவதன் ஒரு பகுதியாகும். நுசிராத் பகுதியை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் பற்றி நான் செய்தி வெளியிட்டிருந்தேன்”.

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு எங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடாது என்று எங்களுக்குத் தெரியும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்