09 மாதங்களில் 168 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; 22 பேர் கர்ப்பம்: பொலிஸாரின் அலட்சியமும் காரணம் என்கிறார் ராஜாங்க அமைச்சர் கீதா

🕔 October 25, 2023

ந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர் என, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஒக்டோபர் 25) ஊடகங்களிடம் பேசிய அவர், 168 துஷ்பிரயோக சம்பவங்களில் 22 குழந்தைகள் கர்ப்பமடைந்ததாக கூறினார்.

எனவே, இது தொடர்பில் இலங்கையின் பொலிஸ் திணைக்களம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்திய ராஜாங்க அமைச்சர், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெற்றோர்கள், பாடசாலைஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், குழந்தைகளை இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகாமல் பாதுகாக்குமாறும் கேட்டுக் கொண்டார். .

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களுக்கு என்ன அல்லது யாரைக் குற்றம் சாட்டுவது என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, பதிலளித்த ராஜாங்க அமைச்சர்; பொலிஸாரையும் அவர்களின் அலட்சியத்திற்கு குற்றம் சாட்ட வேண்டும் எனக் கூறியதோடு, போதைப் பொருட்களின் அதிகரித்த பாவனையும் இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம் என்றார்.

எனவே, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில், தான் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறும் அதே வேளையில், இலங்கையின் ஒட்டுமொத்த சமூகமும் அத்தகைய பொறுப்பை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்