உத்தேச மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்

உத்தேச மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் 0

🕔27.Jun 2023

உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் மிஹிலக்க அறையில் உத்தேச மின்கட்டண திருத்தத்தை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுகிறது. இங்கு பொது மக்கள் தங்களது கருத்துக்களை வழங்க முடியும். இதற்கமைய

மேலும்...
16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: மனைவியே காட்டிக் கொடுத்தார்

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: மனைவியே காட்டிக் கொடுத்தார் 0

🕔23.Jun 2023

களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் – களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜூலை 07 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மே 11ஆம் திகதி களுத்துறை பிரதேச துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பணியகத்திற்கு வந்து வாக்குமூலமொன்றை

மேலும்...
30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை: வர்த்தமானி அறிவிப்பு

30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை: வர்த்தமானி அறிவிப்பு 0

🕔23.Jun 2023

எதிர்வரும் 30ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 10(1) பிரிவின் கீழ், சிறப்பு வங்கி விடுமுறை

மேலும்...
டைட்டன் நீர்மூழ்கி வெடித்துச் சிதறியது; பயணித்தவர்கள் ஐவரும் மரணம்: என்ன நடந்தது?

டைட்டன் நீர்மூழ்கி வெடித்துச் சிதறியது; பயணித்தவர்கள் ஐவரும் மரணம்: என்ன நடந்தது? 0

🕔23.Jun 2023

கடலில் 111 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி – உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது. டைட்டன் நீர்மூழ்கியில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது. இது தொடர்பில் அமெரிக்கா, கனடா,

மேலும்...
ஜப்பான் மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி

ஜப்பான் மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி 0

🕔22.Jun 2023

ஜப்பானிய மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானில் வேலை வாய்ப்புகளை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் தொழிலாளர்களை அனுப்பும் பணிகளை முறைமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது, அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாடசாலைகளில் 06ஆம் தரம்

மேலும்...
பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோருவது, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கம்: நீதிமைச்சர் தெரிவிப்பு

பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோருவது, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கம்: நீதிமைச்சர் தெரிவிப்பு 0

🕔21.Jun 2023

பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோரப்படுவது தண்டனைக்குரிய குற்றமாக – உத்தேச ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உத்தேச ஊழல் தடுப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நீதியமைச்சர்; பணிபுரியும் இடங்களில் ஆண்களிடமிருந்தே பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும்...
ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல்

ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல் 0

🕔21.Jun 2023

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில், ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா தொழில்துறை நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில்ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத இடங்களை ஊக்குவிக்க, கிழக்கு மாகாணம் மற்றும் மலையகம் ஆகிய இரண்டு பிராந்தியங்களிலும் தனிப்பட்ட அனுபவத்தைப் பெறுவதற்காக வருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தார். இக்கலந்துரையாடலில் ஜப்பான் நாட்டில்

மேலும்...
வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி

வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி 0

🕔21.Jun 2023

ஹோமாகம மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை கொஸ்கொட இத்தருவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில், துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவரின்

மேலும்...
மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல்

மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல் 0

🕔20.Jun 2023

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம – ஜுன் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இவரைக் கைது செய்து – கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்த போதே அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. நபரொருவருக்கு வீடொன்றை வழங்குவதாக உறுதியளித்து 07 மில்லியன்

மேலும்...
ஜும்ஆ தொழுகை நேரத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வு: சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாமல் வைபவங்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை

ஜும்ஆ தொழுகை நேரத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வு: சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாமல் வைபவங்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை 0

🕔20.Jun 2023

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு, மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்குகோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ள அவர்; வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை

மேலும்...
பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது 0

🕔20.Jun 2023

பாண் விலை இன்று (20) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 450 கிராம் பாண் ஒன்று 200 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் பாண் ஒன்று

மேலும்...
நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை 0

🕔20.Jun 2023

இலங்கையில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில்பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்

மேலும்...
வைத்தியர்  மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

வைத்தியர் மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔19.Jun 2023

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றுமொரு வைத்தியரால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மருத்துவர், மருத்துவமனையின் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) கிளையின் அலுவலகப் பொறுப்பாளர் ஆவார். நேற்று காலை தனது அலுவலகத்துக்கு வந்த வைத்தியர் ஒருவர் – தன்னை தாக்கியதாகவும் இதனால் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்

மேலும்...
பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு: காரணமும் வெளியானது

பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு: காரணமும் வெளியானது 0

🕔19.Jun 2023

இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபனின் புதிய படத்துக்கு தன்னால் இசையமைக்க முடியவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துள்ளார். இதனை பார்த்திபடீன தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’டீன்’ என்ற ஒரு படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார். பதின்பருவ சிறுவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானை பார்த்திபன் அணுகியுள்ளார். ஆனால்

மேலும்...
07 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 05 கோடி ரூபா செலவு: வெளியான செய்திக்கு அலி சப்ரி மறுப்பு

07 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 05 கோடி ரூபா செலவு: வெளியான செய்திக்கு அலி சப்ரி மறுப்பு 0

🕔19.Jun 2023

வெளிநாட்டுப் பயணங்களை தான் மேற்கொண்டதன் மூலம், மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக சென்றிருந்தபோது 05 கோடி ரூபாவை செலவிட்டதாக செய்திகள் வெளியாகின. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் – பத்திரிகையாளரொருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மூலம் இந்தத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்