வைத்தியர் மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

🕔 June 19, 2023

நுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றுமொரு வைத்தியரால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மருத்துவர், மருத்துவமனையின் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) கிளையின் அலுவலகப் பொறுப்பாளர் ஆவார்.

நேற்று காலை தனது அலுவலகத்துக்கு வந்த வைத்தியர் ஒருவர் – தன்னை தாக்கியதாகவும் இதனால் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விடயம் தொடர்பாக இரு வைத்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிவடைந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்