07 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 05 கோடி ரூபா செலவு: வெளியான செய்திக்கு அலி சப்ரி மறுப்பு

🕔 June 19, 2023

வெளிநாட்டுப் பயணங்களை தான் மேற்கொண்டதன் மூலம், மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக சென்றிருந்தபோது 05 கோடி ரூபாவை செலவிட்டதாக செய்திகள் வெளியாகின.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் – பத்திரிகையாளரொருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்திருந்தது.

அமைச்சர் இந்த பணத்தை வெறும் 07 வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் செலவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்