வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி

🕔 June 21, 2023

ஹோமாகம மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (21) காலை கொஸ்கொட இத்தருவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில், துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவரின் வீட்டின் முன்பாக இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பாதாள உலகக் குழுத் தலைவர் கொஸ்கொட சுஜீயின் கூட்டாளியான கொஸ்கொட ‘ரன் மஹத்தையா’ என்பவர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, ஹோமாகமவில் 46 வயதுடைய ஒருவர் – அவரின் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்