30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை: வர்த்தமானி அறிவிப்பு

🕔 June 23, 2023

திர்வரும் 30ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 10(1) பிரிவின் கீழ், சிறப்பு வங்கி விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

29ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினமாகும். அன்றைய தினமும் பொது மற்றும் வங்கி விடுமுறை தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்