பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

🕔 June 20, 2023

பாண் விலை இன்று (20) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 450 கிராம் பாண் ஒன்று 200 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் பாண் ஒன்று 100 ரூபாவுக்கு விற்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்