பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு: காரணமும் வெளியானது

🕔 June 19, 2023

யக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபனின் புதிய படத்துக்கு தன்னால் இசையமைக்க முடியவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துள்ளார். இதனை பார்த்திபடீன தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

’டீன்’ என்ற ஒரு படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார். பதின்பருவ சிறுவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானை பார்த்திபன் அணுகியுள்ளார். ஆனால் அதீத வேலைப்பளு காரணமாக தன்னால் இசையமைக்க முடியாது என்று ரஹ்மான் அனுப்பிய மெயிலை பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘சார்.. தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் அதீத வேலைப்பளு காரணமாக இந்த முறை என்னால் உங்கள் படத்துக்கு இசையமைக்கமுடியவில்லை. நீங்கள் லட்சிய இயக்குநர்களில் ஒருவர் என்பதால் – உங்களுடைய கதையை கேட்க நான் மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், பழகுதல் காதலால், விலகுதலும் காதலால், ஆதலால் ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை. வரும் படத்திலும் இருவரும் இணைவோமென நினைத்து இயலாதபோது நண்பர் ஏஆர்ஆர் அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில்’ என்று பதிவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்