20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய வங்கி அதிகாரிகள்; ஓட்டமாவடியில் சம்பவம்: அகப்பட்டது எப்படி?

20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய வங்கி அதிகாரிகள்; ஓட்டமாவடியில் சம்பவம்: அகப்பட்டது எப்படி? 0

🕔3.Jun 2023

ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று ஊழியர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வங்கியின் பிரதி முகாமையாளர், செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் சேவை உதவியாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கியின் பாதுகாப்பு வைப்பு பெட்டியில் இருந்து,

மேலும்...
எரிவாயு விலை நாளை குறைகிறது

எரிவாயு விலை நாளை குறைகிறது 0

🕔3.Jun 2023

எரிவாயுவின் விலையைக் குறைக்கவுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை நாளை (ஜூன் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிற்றோ நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், தற்போது 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. எரிபொருள்கள் சிலவற்றின்

மேலும்...
இரு மணி நேரத்தில் கடவுச் சீட்டு: முறைமை அறிமுகம்

இரு மணி நேரத்தில் கடவுச் சீட்டு: முறைமை அறிமுகம் 0

🕔2.Jun 2023

கடவுச்சீட்டை ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய இதனைக் கூறினார். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு, சிலர் கடவுச்சீட்டுக்களை வழங்கி

மேலும்...
நூற்றுக்கணக்கான பொருட்களுக்குரிய இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்கின்றன: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான பொருட்களுக்குரிய இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்கின்றன: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔2.Jun 2023

நாட்டில் 300 முதல் 400 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்த உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்க டொலர்களின் மேம்பட்ட விநியோகத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளது. எனவே முன்னர் விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்தும் முடிவிற்கு இந்த நிலை வழிவகுத்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட அந்நிய செலாவணி

மேலும்...
பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது 0

🕔2.Jun 2023

பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் இந்த மாத இறுதிக்குள் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக நீண்ட காலமாகவே

மேலும்...
அட்டாளைச்சேனையை அச்சுறுத்தும் ‘மோட்டார் சைக்கிள் ஆசாமிகள்’ தொடர்பில் மக்கள் ஆத்திரம்: பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா?

அட்டாளைச்சேனையை அச்சுறுத்தும் ‘மோட்டார் சைக்கிள் ஆசாமிகள்’ தொடர்பில் மக்கள் ஆத்திரம்: பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா? 0

🕔1.Jun 2023

போக்குவரத்துச் சட்டத்தை மீறும் வகையிலும் மக்களை அச்சுறுத்தும் முறையிலும் – மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் ஆசாமிகளால், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று (01) அட்டாளைச்சேனை சந்தைப் பகுதி பிரதான வீதியின் ஒரே இடத்தில் இரண்டு விபத்துக்கள் நடந்தன. துவிச்சக்கர வண்டியில் பயணிந்த இளைஞர் ஒருவரை – மோட்டார் சைக்கிளில் தலைக் கவசங்கள்

மேலும்...
2048இல் அபிவிருத்தி அடைந்த நாடு என்பதே இலக்கு; ஒரு வருடத்துக்கு முன்னரான நிலைக்கு செல்ல அனுமதியேன்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை

2048இல் அபிவிருத்தி அடைந்த நாடு என்பதே இலக்கு; ஒரு வருடத்துக்கு முன்னரான நிலைக்கு செல்ல அனுமதியேன்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை 0

🕔1.Jun 2023

ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் கூறியுள்ளார். ‘தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை’ நாட்டுக்கு முன்வைத்து இன்று (01) ஆற்றிய விசேட உரையிலேயே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
‘டெய்லி மிரர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராக ஜெமீலா ஹுசைன் நியமனம்

‘டெய்லி மிரர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராக ஜெமீலா ஹுசைன் நியமனம் 0

🕔1.Jun 2023

ஊடகவியலாளர் ஜமிலா ஹுசைன் – டெய்லி மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று (ஜூன் 1) இன்று தொடக்கம் அமுலுக்கு வருகிறது. 2007 ஆம் ஆண்டு டெய்லி மிரரில் இணைந்த ஜமிலா, 2010 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி – வெளிநாட்டு ஊடகமொன்றின் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் அவர் 2020 இல்

மேலும்...
பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் உட்பட 07 பேர் கைது

பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் உட்பட 07 பேர் கைது 0

🕔1.Jun 2023

பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கல்பிட்டி பகுதியில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 30 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களில் 38 வயதான, இந்தியா – தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவன் மன்னார்

மேலும்...
ஒப்புக் கொண்டபடி பங்களாஷேின் கடன் செலுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர் உறுதி

ஒப்புக் கொண்டபடி பங்களாஷேின் கடன் செலுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர் உறுதி 0

🕔1.Jun 2023

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை, இந்த ஆண்டு இலங்கை செலுத்தும் என – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (01) தெரிவித்தார். ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடன் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இலங்கை பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்

மேலும்...
யூனானி வைத்தியர்களுக்கு அநீதி: நியாயம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை

யூனானி வைத்தியர்களுக்கு அநீதி: நியாயம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை 0

🕔1.Jun 2023

ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது – ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது என்றும், ஆனால் தற்போது இந்த நடைமுறை  மீறப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இம்முறை 100 க்கும் மேற்பட்ட ஆயுர்வேத

மேலும்...
உலக பணக்காரர் பட்டியலில் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடம்: சொத்து மதிப்பும் வெளியானது

உலக பணக்காரர் பட்டியலில் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடம்: சொத்து மதிப்பும் வெளியானது 0

🕔1.Jun 2023

எலோன் மஸ்க் மீண்டும் – உலக பணக்காரர்கள் பட்டியலில்முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இதுவரை முன்னிலையில் இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 74 வயதான பேனாட் ஆனோல்ட் (Bernard Arnault) என்பவர். பேனாட் ஆர்னோல்ட் மற்றும் எலோன் மஸ்க் இடையே அவ்வப்போது போட்டித்தன்மை நிலவி வந்துள்ளது. இந்நிலையில், எலோன் மஸ்க் மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில்

மேலும்...
விமல் சொன்னது பொய்: சவேந்திர சில்வாவிடமிருந்து  ‘லெட்டர் ஒஃப் டிமாண்ட்’

விமல் சொன்னது பொய்: சவேந்திர சில்வாவிடமிருந்து ‘லெட்டர் ஒஃப் டிமாண்ட்’ 0

🕔1.Jun 2023

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச கூறிய விடயம் தொடர்பில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கோரிக்கைக் (Letter Of Demand) கடிதமொன்றை நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பியுள்ளார். விமல் வீரவன்சவின் புதிய புத்தக வெளியீட்டு விழாவின் போது அவர் மேற்படி விடயத்தை கூறியிருந்தார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்திற்கு சவேந்திர சில்வா உடந்தையாக

மேலும்...
14 வகையான தொழில் துறையினர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

14 வகையான தொழில் துறையினர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔1.Jun 2023

நாட்டிலுள்ள14 வகை தொழில் துறையினர் – உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இன்று (01) முதல் தம்மைப் பதிவு செய்துகொள்வதை கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் மே 31 ஆம் திகதி, 2017ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டம்

மேலும்...
மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு எந்த நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் விளக்கம்

மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு எந்த நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் விளக்கம் 0

🕔1.Jun 2023

நாட்டில் 111 மருந்துகளுக்கு நேற்றைய தினம் (30) வரை தட்டுப்பாடு நிலவியதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மருந்துப் பொருள் தட்டுப்பாடு குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சில மருத்துவ நிபுணர்கள் கடந்த கால புள்ளிவிபரங்களின் மூலம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்