உலக பணக்காரர் பட்டியலில் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடம்: சொத்து மதிப்பும் வெளியானது

🕔 June 1, 2023

லோன் மஸ்க் மீண்டும் – உலக பணக்காரர்கள் பட்டியலில்முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் இதுவரை முன்னிலையில் இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 74 வயதான பேனாட் ஆனோல்ட் (Bernard Arnault) என்பவர்.

பேனாட் ஆர்னோல்ட் மற்றும் எலோன் மஸ்க் இடையே அவ்வப்போது போட்டித்தன்மை நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், எலோன் மஸ்க் மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டக்ஸ் (Bloomberg Billionaires Index) தற்போது வெளிட்டுள்ள கணக்கீட்டின் படி, எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 192 பில்லியன் அமெரிக்க டொலராகவும் பேனாட் ஆர்னோல்ட்டின் நிகர சொத்து மதிப்பு 187 பில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்படுகின்றது.

பேனாட்டின் LVMH நிறுவனத்தின் பங்குகளில் சரிவு ஏற்பட்டதை அடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 500 பேரின் பெயர்களை ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டக்ஸ் வௌியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்