பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் உட்பட 07 பேர் கைது

🕔 June 1, 2023

பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கல்பிட்டி பகுதியில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 30 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களில் 38 வயதான, இந்தியா – தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவன் மன்னார் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்