‘டெய்லி மிரர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராக ஜெமீலா ஹுசைன் நியமனம்

🕔 June 1, 2023

டகவியலாளர் ஜமிலா ஹுசைன் – டெய்லி மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இன்று (ஜூன் 1) இன்று தொடக்கம் அமுலுக்கு வருகிறது.

2007 ஆம் ஆண்டு டெய்லி மிரரில் இணைந்த ஜமிலா, 2010 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி – வெளிநாட்டு ஊடகமொன்றின் செய்தியாளராகப் பணியாற்றினார்.

பின்னர் அவர் 2020 இல் டெய்லி மிரரில் மீண்டும் சேர்ந்து – இணை ஆசிரியராக செயல்பட்டார்.

2003 ஆம் ஆண்டு சண்டே லீடரில் இருந்து தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கிய ஜமிலா, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் சமூகங்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் பற்றிய செய்திகளுக்காக ஒரு சர்வதேச விருதையும் மூன்று உள்ளூர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவரது புதிய நியமனத்தின் மூலம், ஜமீலா தற்போது தேசிய நாளிதழொன்றில் பிரதம ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.

இதேவேளை, நாளிதழொன்றின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் ஜமிலா ஹுசைன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்