மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு எந்த நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் விளக்கம்

🕔 June 1, 2023

நாட்டில் 111 மருந்துகளுக்கு நேற்றைய தினம் (30) வரை தட்டுப்பாடு நிலவியதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மருந்துப் பொருள் தட்டுப்பாடு குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சில மருத்துவ நிபுணர்கள் கடந்த கால புள்ளிவிபரங்களின் மூலம் உண்மையான விடயத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.

“மூன்று மாதங்களுக்கு முன்பு 200 பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது, தற்போது 112 ஆக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இது 70 ஆக குறையும்” என்று அமைச்சர் குறிப்பட்டார்.

“கடந்த வருடத்தில் இருந்து இலங்கை மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. இப்போது, நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். இந்நிலையில், நிதியை விடுவிப்பதில் சிறுசிறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தபோதிலும் மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான போதிய நிதியை திறைசேரியில் இருந்து பெற்றுக் கொள்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்