நூற்றுக்கணக்கான பொருட்களுக்குரிய இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்கின்றன: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

🕔 June 2, 2023

நாட்டில் 300 முதல் 400 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்த உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை அமெரிக்க டொலர்களின் மேம்பட்ட விநியோகத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளது. எனவே முன்னர் விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்தும் முடிவிற்கு இந்த நிலை வழிவகுத்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இறக்குமதி கட்டுப்பாடுகள் ஆரம்பத்தில் அமுல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“இலங்கை ரூபாயின் குறிப்பிடத்தக்க பெறுமதி வீழ்ச்சி, இந்த நடவடிக்கைகளின் தேவையை மேலும் அவசியமாக்கியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த சவாலான காலக்கட்டத்தில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்தது”.

இருந்தபோதிலும் உள்ளூர் கைத்தொழில்களை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய கூறினார்.

“எனவே, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த நேரத்தில் நீக்கப்படாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், 1,465 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்தது. இருப்பினும், பின்னர், வளர்ந்து வரும் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் மீது சில கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்